Header

Sri Lanka Army

Defenders of the Nation

logo logo logo

10th October 2018 22:29:03 Hours

இராணுவ ரக்பி அணி மற்றும் வெளிநாட்டு ரக்பி அணிகளுக்கு இடையிலான உறவு முறை

இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய இலங்கை இராணுவத்தின் உயரதிகாரிகள் மூவர் வெளிநாட்டிற்கு பயணத்தை மேற்கொண்டனர்.

இலங்கை இராணுவத்தின் ரக்பி விளையாட்டு சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, பிரதி தலைவர் பிரிகேடியர் எல்.ஏ.என்.எஸ் வனிகசிங்க, செயலாளர் லெப்டினன்ட் கேர்ணல் எஸ்.ஜே சமரசிங்க அவர்கள் இந்த சுற்றுலாவை மேற்கொண்டனர்.

மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களை இராணுவ சம்பிரதாய முறைப்படி பிஜி தலைமையகத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுடன் வரவேற்றார். பின்னர் பிஜி ரக்பி சங்கத்தின் தலைவர் திரு ஜோன் ஓ கோர்ணர், திரு லெவனி மாட்டே அவர்களுடன் இந்த இராணுவ உயரதிகாரிகள் ரக்பி தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

பிஜி மற்றும் இலங்கையிலுள்ள பல ரக்பி விளையாட்டு துறைத் திட்டங்களுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இந்த கலந்துரையாடலின் மூலம் தகவல்கள் வெளியிடப்பட்டன.