Header

Sri Lanka Army

Defender of the Nation

06th October 2018 20:20:21 Hours

இராணுவப் படையினரின் பங்களிப்புடன் இடம் பெற்ற யாழ் விளையாட்டு போட்டிகள்

யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு போட்டிகள் (05) ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள துரையப்பா விளையாட்டரங்கத்தில் இடம்பெற்றது.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய குடாநாட்டில் இத்தகைய விளையாட்டு போட்டிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ் விளையாட்டு போட்டியானது குடாநாட்டில் சேவையாற்றும் நூற்றுக்கணக்கான இராணுவ விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் திறமைகளை வெளி காட்டும் போட்டியாக திகழ்ந்தது.

யாழ்ப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்யாராச்சி அவர்களின் தலைமையில் இப் போட்டியானது (வடக்கு) முன்னரங்க பராமரிப்பு பாதுகாப்பு தலைமையகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப் போட்டியில் ஆண்களுக்கான சிறந்த விளையாட்டு வீரனாக 1ஆவது விஜயபாகு காலாட் படையணியின் கோப்ரல் ஆர். ஐ. என் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார். பெண்களுக்கான சிறந்த விளையாட்டு வீராங்கனையாக 7ஆவது மகளிர் படையணியின் சாதாரண படைவீராங்கனை ஆர். ஆர். ஏ. பி குமாரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்போட்டியில் பங்கு பற்றி வெற்றிகளைப் பெற்றுக் கொண்ட வீர, வீராங்கனைகளுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களினால் சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் வடக்கு முன்னரங்க பாதுகாப்பு கட்டளை தளபதி மற்றும் 51, 52, 55ஆவது படைத் தளபதிகளும் கலந்து கொண்டனர். buy footwear | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth