Header

Sri Lanka Army

Defender of the Nation

06th October 2018 20:42:19 Hours

இராணுவ தினத்தை முன்னிட்டு கிழக்கு – முன்னரங்க பாதுகாப்பு படையினரால் கொடி அணிவகுப்பு பேரணி

69 ஆவது இராணுவ தினமான (ஒக்டோபர் 10) ஆம் திகதியை முன்னிட்டு கிழக்கு – முன்னரங்க பாதுகாப்பு தலைமையகத்தினரால் ஏற்பாடு செய்யப்ட்ட இந்த கொடி அணிவகுப்பு பேரணியானது (5) ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஹிங்குராக்கொட மற்றும் பொலன்னறுவை நகரங்களில் நடைபெற்றன.

இந் நிகழ்வானது கிழக்கு பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித பானன்வல மற்றும் கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் முதநாயக அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த அணிவகுப்பு இடம் பெற்றன.

இந்த அணிவகுப்பில் கிழக்கு 3ஆவது பொறியாளர் சேவை படையினர், 4ஆவது இலங்கை இராணுவ சேவைப் படையணி, 5 ஆவது இலங்கை இராணுவ மருத்துவப் படையணி, 3 ஆவது இலங்கை இராணுவப் போர்கருவி படையணி, 3 இலங்கை மின்சார மற்றும் மெக்கானிக்கல் பொறியியலாளர் படையணி, 2ஆவது இலங்கைப் இராணுவப் பொலிஸ் படையணி மற்றும் 6ஆவது (தொண்டர்) மற்றும் இலங்கை இராணுவப் பொது சேவைப் படையணி ஆகியோர் இந்த அணிவகுப்பு பேரணியில் கலந்து கொண்டனர். spy offers | Nike, adidas, Converse & More