Header

Sri Lanka Army

Defender of the Nation

25th September 2018 16:08:25 Hours

யாழ் படையினரால் சுகாதார வசதிகள் வழங்கிவைப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளிற்கிணங்க கொழும்பு 306 / சி டயமன்ட்ஸ் லயன்ஸ் கழகத்தின் அனுசரனையுடன் பாரதிபுரம் மற்றும் கொக்குவில் பிரதேசங்களில் சுகாதார தேவைப்பாடுகளின் அவசியத்தைக் கருத்திற்கொண்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தினருக்கு மூன்று மலசலகூடங்கள் அமைத்து யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.

அந்த வகையில் யாழ் படையினரால் இம் மூன்று மலசலகூடங்கள் தேவையுள்ள குடும்பத்தினருக்காக கடந்த ஞாயிற்றுக் கிழமை (23) வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் கொழும்பு 306 / சி டயமன்ட்ஸ் லயன்ஸ் கழகத்தின் தலைவரான திரு நிமல் ரணவக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். Adidas footwear | New Balance 991 Footwear