Header

Sri Lanka Army

Defender of the Nation

15th September 2018 17:00:53 Hours

‘இராணுவ பரா’ மெய்வல்லுனர் போட்டிகள்

இலங்கை இராணுவத்திலுள்ள அவயங்களை இழந்த 700 படை வீர ர்களின் பங்களிப்புடன் இடம்பெறும் ‘ இராணுவ பெரா’ மெய்வல்லுனர் போட்டிகள் ஹோமாகமயில் உள்ள தியகம விளையாட்டு மைதானத்தில் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றது.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் (13) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றன. இந்த ஊடக சந்திப்பு இலங்கை பரா மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

மேலும் இந்த ஊடக சந்திப்பில் பரா மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ரஜீவ விக்ரமசிங்க, இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து, பரா சங்கத்தின் செயலாளர் கேர்ணல் ராஜா குணரத்ன மற்றும் டயலொக் நிறுவனத்தின் வியாபார முகமையாளர் திருமதி அமாலி நாணயக்கார அவர்களும் இணைந்து கொண்டனர்.

இந்த போட்டிகளில் சக்கர நாற்காலிவலைப்பந்தாட்டம், பெட்மின்டன், சைக்கிளோட்டம், சக்கர நாற்காலி மரதன், வில்லெய்தல், பாரம் தூக்குதல், கரப்பந்தாட்டம், கடலோர கரப்பந்தாட்டம், மேசைப் பந்து, கிரிக்கட், நீச்சல், சக்கர நாற்காலி டெனிஸ், குறிபாத்து துப்பாக்கி சுடும் போட்டிகள் இடம்பெறவிருக்கின்றன.

இராணுவ பரா மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதி பரிசளிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அத்மிரால் ரவீந்திர விஜயகுணரத்ன அவர்கள் வருகை தரவிருக்கின்றார். Sportswear free shipping | UK Trainer News & Releases