Header

Sri Lanka Army

Defender of the Nation

14th September 2018 14:51:34 Hours

கிளிநொச்சி படையினர்களுக்கு வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் பயிற்சிகள்

இலங்கை ரூபாவகினி கூட்டுத்தாபனம் மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் அதிகாரிகளின் அனுசரனையுடன் கிளிநொச்சியில் சேவை புரியும் படையினர்களுக்கு வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் பயிற்சிகள் செப்டம்பர் மாதம் 3 – 5 திகதி வரை இடம்பெற்றது.

இந்த பயிற்சிகள் பாரதிபுரம் அடிப்படை உடற்பயிற்சி பாடசாலை முகாமில் இடம்பெற்றன. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது வழிக்காட்டலின் கீழ் மூன்று நாள் பயிற்சிகள் இடம்பெற்றன.

பயிற்சி நெறிகளை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் பிரதி பணிப்பாளர் ஜயமிமால பெரேரா, நிஹால் திஷேரா, அசோக ஜயசேகர, லேக்‌ஹவுஸ் நிறுவத்தின் படப்பிடிப்பாளர் திலக் பெரேரா அவர்கள் மேற்கொண்டனர். latest jordan Sneakers | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth