Header

Sri Lanka Army

Defender of the Nation

24th July 2018 14:13:21 Hours

ஓய்வு பெற்றுச் செல்லும் இராணுவ உயரதிகாரிக்கு கௌரவ மரியாதை

இலங்கை இராணுவ கஜபா படையணியில் நீண்ட நாட்கள் சேவை புரிந்து ஓய்வு பெற்று செல்ல இருக்கும் மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க அவரிற்கு சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் இராணுவ கௌரவ மரியாதையுடன் (21) ஆம் திகதி சனிக் கிழமை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டன.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ உயரதிகாரியை பிரதி கட்டளை தளபதி கேர்ணல் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வரவேற்று பின்னர் கஜபா படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க அவர்கள் காலஞ்சென்ற முன்னாள் இராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களது நினைவு தூபிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

பின்னர் கஜபா படையணியணி தலைமையகத்தினால் ஒழுங்கு செய்த பிரியாவிடை நிகழ்விலும் இவர் கலந்து கொண்டு படையினருடனும் உரையாடலையும் மேற்கொண்டார்.

இராணுவத்தில் 35 வருடம் சேவைகளை மேற்கொண்ட இந்த உயரதிகாரியின் சேவையை பாராட்டி கஜபா படையணியின் படைத் தளபதி மற்றும் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இந் நிகழ்வில் உரையை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் கஜபா சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவ நெல்சன் அவர்களும் கலந்து கொண்டு இந்த உயரதிகாரி மற்றும் அவரது பாரியாரை அதிகாரிகளின் விடுதிக்கு அழைத்துச் சென்று இவர்களுக்கு விருந்துபசாரம் வழங்கப்பட்டது.

Running Sneakers | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ