Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2018 17:05:08 Hours

மிஹிந்து செத் மெதுரேயில் புதிய தியான மண்டபம் திறந்து வைப்பு

அத்திடியவில் அமைந்துள்ள மிஹிந்து செத் மெதுரே முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அவயங்களை இழந்த 41 இராணுவ வீரர்களின் ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதிய தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இப் புதிய தியான மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்விற்காக (18) ஆம் திகதி புதன் கிழமை காலை மறுவாழ்வு பணிப்பகத்தின் ஜெனரல் மேஜர் ஜெனரல் எஸ்.கே திருநாவூகரசு மற்றும் மிஹிந்து செத் மெதுரே கட்டளை தளபதியான கேர்ணல் என்.பி.ஏ குணவர்தன அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவ தளபதி லெப்டினென்ட ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் கலந்து கொண்டார்.

அதற்கமைய இராணுவ தளபதி லெப்டினென்ட ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களால் பிரித் நினைவு படிகத்ததை திறந்து வைத்ததுடன் தியான மண்டபத்ததையும் திறந்து வைத்தார். இந்த புதிய தியாண மண்டபமானது ஒரே தடவையில் 60 க்கும் அதிகமான படையினர் அமர்ந்து தியனம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இப் புதிய மண்டபத்தில் ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்ததுடன் இராணுவ தளபதியவர்களால் இப் புத்தர் சிலைக்கு மலர் தட்டுவைத்து பூஜை வழங்கினர்.

இராணுவ தளபதியின் வருகையின் அடையாளமாக மிஹிந்து செத் மெதுரே வளகத்தில் ‘சல்’ மரக்கன்றொன்றும் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேநீர் விருந்துபசாரத்தின் போது இராணுவ தளபதியவர்கள் மிஹிந்து செத் மெதுரே புனர்வாழ்வளிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அவயங்களை இழந்த இராணுவ வீரர்களுடன் சில கருத்துக்களையும் பாறிமாறிக் கொண்டார்.

இந் நிகழ்விற்கு இராணுவ சுகாதார சேவையின் பணிப்பாளர் ஜெனரல் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க, நிறைவேற்று ஜெனரல் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, உபகரண மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, இராணுவ சேவை செயலகத்தின் மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க, சுகாதார சேவை பணிப்பாளர் மேஜர் மேஜர் ஜெனரல் கே.பீ சுமனபால, மறுவாழ்வு பணிப்பகத்தின் ஜெனரல் மேஜர் ஜெனரல் எஸ்.கே திருநாவூகரசு அவர்களும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

affiliate tracking url | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp