Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd July 2018 10:54:20 Hours

இராணுவத்தின் பணிகள் மற்றும் விரைவான நிவாரண சேவைகளுக்கு கண்டி முஸ்லிம் மக்கள் பாராட்டுகள் தெரிவிப்பு

கண்டியில் போகம்பரவில் உள்ள மசூதியில் (2) ஆம் திகதி திங்கட் கிழமை கடந்த தினங்களில் கண்டியில் இடம்பெற்ற வன்முறை இனவாத பதட்டத்தை தடுப்பதற்காக இலங்கை இராணுவம் ஆற்றிய சேவைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது இராணுவத்தின் ஒத்துழைப்பை கௌரவித்து கண்டி முஸ்லீம் மக்கள் இராணுவத்தினருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக முஸ்லீம் மௌவிகளின் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் நிகழ்வொன்று இந்த மசூதியில் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த மக்களினால் ஒழுங்கு செய்யப்பட்டன.

கடந்த தினங்களில் கண்டியில் இடம்பெற்ற வன்முறையின் போது "இராணுவ படையினர்கள் மிகவும் பாரபட்சமன்றி, சரியான நேரத்தில் தங்களது கடமைகளை பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டனர். அத்துடன் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் சமயங்களில் மக்களுக்கு சாதகமான உதவிகளை வழங்கினர். மேலும் இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கடந்த தினங்களில் கண்டியில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் போது நேரடியாக இப்பிரதேசத்திற்கு வருகை தந்து இப்பிரதேச வாசிகளுடன் சமாதானம் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டார் என்றும் இந்த மசூதியில் இஸ்லாம் பிரதான மௌவிலஅவர்கள் இராணுவத்தினரை பாராட்டி உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்விற்கு இராணுவ தளபதியை பிரதிநிதித்துவ படுத்தி மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ், முன்னாள் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன மற்றும் தற்போதைய 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணாயக்கார அவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வின் போது மத்திய பாதுகாப்பு படைத் தளபதியினால் மசூதியில் முஸ்லீம் மக்கள் மத்தியில் உரையும் நிகழ்த்தப்பட்டன.

Sneakers Store | Nike Shoes, Sneakers & Accessories