Header

Sri Lanka Army

Defender of the Nation

26th June 2018 21:54:05 Hours

கெனேடிய உயர் ஆணையாளர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான கெனேடிய உயர் ஆணையாளரான கௌரவ எச்.ஈ டேவிட் மெக்கினன் (HE David Mckinnon) அவர்கள் (26) ஆம் திகதி செவ்வாய் கிழமை இராணுவ தலைமையக அலுவலகத்தில் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பில் யுத்த்ததிற்கு பிந்தைய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் பாதுகாப்புப் படையினரின் சமூக பொறுப்புணர்வு மற்றும் சமூகங்களில் சமரச நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல் போன்றவற்றை பற்றி கலந்துறையாடினர்.

அதனைத் தொடர்ந்து சந்திப்பின் முடிவில் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக மற்றும் கெனேடிய உயர் ஆணையாளர்; இருவருக்கும்; இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இராணுவ தலைமையகத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு கெனேடிய உயர் ஸ்தானிகர் விருந்தினரின் புத்தகத்தை கையொப்பம்மிட்டார்.

இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த கெனேடிய உயர் ஆணையாளர் குழுவினரை இராணுவ தளபதி அலுவலகத்தில் வைத்து இராணுவ சேவை செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க அவர்களால் வரவேற்கப்பட்னர். இந் நிகழ்வில் இராணுவ தலைமையகத்தின் பணிப்பாளர் ஜெனரல் வெளியுறவு நடவடிக்கை மேஜர் ஜெனரல் மர்வின் பெரேரா அவர்களும் கலந்து கொண்டனர். Best Authentic Sneakers | Nike