Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd June 2018 10:59:53 Hours

இராணுவ தன்னார்வ படையணியின் கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டி முடிவு

இலங்கை இராணுவ தன்னார்வ படையணியின் படைத் தலைமையகத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டு படையணிகளுக்கான கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டி 2018 மே மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை பனாகொட இராணுவ படைத் தலைமையக விளையாட்டு மைதானம் மற்றும் மஹரகம தேசிய இளைஞர் மைதான வளாகத்தில் நடைபெற்றது.

இப் போட்யில் இறுதியில் சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வு (01) ஆம் திகதி மாலை தேசிய இளைஞர் மைதான வளாகத்தில் நடைபெற்றதுடன் பிரதான அதிதியாக இலங்கை இராணுவ தன்னார்வ படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன கலந்து கொண்டார்.

பனாகொட இராணுவ படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில இடம் பெற்ற கூடைப் பந்து போட்டியில் 2ஆவது (தன்னார்வ) இலங்கை இராணுவ மகளிர் படையணி முதல் இடத்தை பெற்றதுடன் 6 ஆவது (தன்னார்வ) இலங்கை இராணுவ மகளிர் படையணி இரண்டாவது இடத்தை பெற்று வெற்றிப்பெற்றது.

படையணிகளுக்கான மகளிர் கூடைப் பந்து போட்டியில் 6 மகளிர் குழுவினர் பங்கு பற்றியதுடன் 6 ஆவது (தன்னார்வ) இலங்கை இராணுவ மகளிர் படையினர்களால் இரண்டாவது இடமும் 2 ஆவது (தன்னார்வ) பொது சேவை இலங்கை இராணுவ மகளிர் படையினர்களால் இரண்டாவது இடத் தையும் பெற்றுக் கொண்டனர்.

இடம் பெற்ற கூடைப் பந்து சுப்பர் லீக் சுற்றில் 8 குழுவினர்கள் கலந்து கொண்டதுடன் இலங்கை இராணுவ சிங்க படையணி குழுவினர் வெற்றியை தனதாக்கி கொண்டனர் அத்துடன் இலங்கை இராணுவ பொறியியல் படையணி இரண்டாவது இடத்தை பெற்றனர்.

இலங்கை இராணுவ தன்னார்வ படையணியின் படைத் தலைமையகத்தில் வருடாந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இலங்கை விளையாட்டு கழகத்தினரால் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு கீழ் இப் போட்டிகள் இடம் பெற்றனர்.

Nike sneakers | Women's Nike Superrep