Header

Sri Lanka Army

Defender of the Nation

01st June 2018 15:14:58 Hours

படையணிகளுக்கு இடையிலான ‘வோட்டர் போலோ’ நீச்சல் போட்டிகள்

இலங்கை இராணுவத்தில் உள்ள படையணிகளுக்கு இடையிலான 2018 ஆம் ஆண்டிற்கான ‘வோட்டர் போலோ’ நீச்சல் போட்டிகள் இறுதி சுற்று நிகழ்வுகள் (31) ஆம் திகதி பனாகொடையில் அமைந்துள்ள விளையாட்டு தொகுதியில் இடம்பெற்றன.

இந்த போட்டியில் 15 படையணியைச் சேர்ந்த 256 இராணுவ போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இலங்கை இராணுவ மகளீர் படையணி, இராணுவ பொலிஸ் படையணி, நான்கு பகுதிகளாக 45 தங்கப் பதக்கங்களை இந்த போட்டிகளில் பெற்றுக் கொண்டனர்.

இந்த போட்டிகள் 29 – 31 ஆம் திகதி வரை 3 நாட்கள் இடம்பெற்றன.

இறுதி பரிசளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக இராணுவ நீச்சல் போட்டி சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன அவர்கள் வருகை தந்து வெற்றியாளர்களுக்கு பரிசினையும் வழங்கி வைத்தார்.

இந்த போட்டிகளில் இலங்கை சிங்கப் படையணி 383.5 புள்ளிகளையும், மின்சார பொறியியலாளர் படையணி 288.5 புள்ளிகளையும், 1, 4 இராணுவ மகளீர் படையணி 43, 38 புள்ளிகளையும் பெற்று கொண்டனர்.

இந்த போட்டியில் 12 நடுவர்கள் கடமையாற்றினார்கள்

போட்டியில் வெற்றி பெற்றவர்களது விபரங்கள் கீழ்வருமாறு:-

ஆண்களுக்கான திறந்த போட்டிகளில்

இலங்கை சிஙகப் படையணி – வெற்றியாளர்கள்

இலங்கை மின்சார பொறியியலாளர் படையணி – இரண்டாவது இடம்.

சிறந்த நீச்சளாளர் – கோப்ரல் டி.எம்.சி.எல் ஜயசிங்க (இபொப)

பெண்களுக்கான திறந்த போட்டிகளில்

1 ஆவது மகளீர் படையணி – வெற்றியாளர்கள்

4 (தொ) ஆவது மகளீர் படையணி – இரண்டாவது இடம்

சிறந்த நீச்சளாளர் – லான்ஸ் கோப்ரல் ஆர்.டப்ள்யூ.டீ சொயிஷா (1 இமப)

புதிதாக இணைந்த படை வீரர்களின் போட்டிகள்

இலங்கை படைக்கலச் சிறப்பணி – வெற்றியாளர்

கஜபா படையணி – இரண்டாவது இடம்

சிறந்த நீச்சளாளர் – லான்ஸ் கோப்ரல் ஏ.டப்ள்யூ.ஆர்.ஆர் கருணாரத்ன (இபசி)

புதிதாக இணைந்த படை வீராங்கனைகளின் போட்டிகள்

3 ஆவது (தொ) இராணுவ மகளீர் படையணி (3 இமப) – வெற்றியாளர்

2 ஆவது(தொ) இராணுவ மகளீர் படையணி (2 இமப) – இரண்டாவது இடம்

சிறந்த நீச்சளாளர் – போர் வீராங்கனை ஏ.எம்.பி.பி சாந்தி (3 இமப)

Sports News | Nike Air Max