Header

Sri Lanka Army

Defender of the Nation

25th May 2018 20:05:23 Hours

இராணுவத்தினரால் அனர்த்த மீட்பு பணிகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நிமித்தம் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தின் பாதிப்படைந்த பிரதேசங்களான கேகாலை, களுத்தரை, பொலன்னறுவை, கண்டி, காலி, இரத்தினபுரி, கம்பஹா, புத்தளம், மாத்தறை, குருணாகல், பதுளை, கொழும்பு பிரதேசங்களில் அனர்த்த மத்திய முகாமைத்து நிலையம் மற்றும் பிரதேச செயலகத்துடன் இணைந்து அனர்த்த மீட்பு பணிகளில் இராணுவத்தினர் (25) ஆம் திகதி மாலை ஈடுபட்டுள்ளனர்.

யடகம்பிடிய, புளத்சிங்கள போன்ற பிரதேசங்களில் 58, 582 ஆவது படைத் தலைமையகங்கள் மற்றும் கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த 19 இராணுவத்தினரது பங்களிப்புடன் வெள்ளத்தில் பாதிப்படைந்த வயோதிப பெண் ஒருவரை காப்பாற்றி யட்டம்பிடிய பாலர் பாடசாலையில் அமைந்துள்ள அனர்த்த முகாமில் (24) ஆம் திகதி கொண்டு போய் சேர்த்தனர்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விடுத்த பணிப்புரைக்கமைய இராணுவத்தினரால் மே மாதம 20 ஆம் திகதி தொடக்கம் இந்த மீட்பு பணிகள் நாடாளாவிய ரீதியில் மேற்கொள்கின்றனர்.

இராணுவத்தைச் சேர்ந்த 24 படையணிகளைச் சேர்ந்த 1200 படையினர் இந்த அனர்த்த மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் படையினர் உணவு பொருட்கள் விநியோகம், வீட்டு திருத்த வேலைகளையும் இந்த பிரதேசத்தில் மேற்கொள்கின்றனர்.

எட்டாவது இலேசாயுத காலாட் படையணி, 143 ஆவது படைத் தலைமையகம் இணைந்து ராகம புணர்வாழ்வு வைத்தியசாலை வளாகம் மற்றும் கட்டிடங்களை திருத்தும் பணிகளில் ஈடுபட்டனர். ஒன்பதாவது (தொண்டர்) இலேசாயுத காலாட் படையணியினால் அம்பத்தல தண்ணீர் இயந்திரம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

14 ஆவது படைப் பிரிவின் 8 ஆவது இலேசாயுத காலாட் படையணி வீதி அபிவிருத்தி அதிகார சபையினருடன் இணைந்து (24) ஆ ம் திகதி பகல் கடுவெல களனி பாலம் திருத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் 141 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 8 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் 12 படை வீரர்கள் களனி அனைக்கட்டு, பகுரு ஓயா, மல்வான பிரதேசங்களில் அனர்த்த பணிகளில் ஈடுபட்டனர்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11, 111 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் 2 ஆவது சிங்கப் படையணியினால் மன்சரிவு பாதிப்புக்கு உள்ளான கிதுல்கோட்டை, ஜயசுந்தரகம மற்றும் லபுவலிக்கொடுவ பிரதேசங்களில் பாதிப்புக்கு உள்ளாகி நாவலப்பிட்டி மத்திய கல்லூரியிலும், ஜயசுந்தர இஸ்லாம் கலாச்சார நிலையம் மற்றும் லம்புவெல்கொடுவ பள்ளியில் பாதிப்புட்டிருக்கும் பிரதேசவாசிகளுக்கு உதவும் பணிகளில் இந்த படையினர் ஈடுபட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் பாதிப்புக்கு உள்ளான மஹவெவ, இரனவில, உடப்புவ, பத்ஹாவெவ மற்றும் வலஹாபிடிய போன்ற பிரதேசங்களில் (24) ஆம் திகதி வியாழக் கிழமை 16 ஆவது கஜபா படையணியினால் அனர்த்த மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அனர்த்த த்தினால் பாதிப்படைந்த 40 குடும்பத்தினருக்கு 143 ஆவது படைத் தலைமையகத்தினால் புத்தளம் மாவட்டங்களில் உதவிகளை வழங்கியுள்ளார்கள். 16 ஆவது கஜபா படையினரால் தொடுவாய், மாரவில பிரதேசங்களில் பாதிப்படைந்த மக்களை மிட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் 16 ஆவது கஜபா படையணியினால் (23) ஆம் திகதி மாலை வெள்ளத்தினால் பாதிப்புற்ற மொரியகுளம், களுகஸ்வெவ பிரதேசத்தில் இராணுவத்தினர் கால்வாய் வங்கியின் பிளவை நிறுத்தும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

வஹவத்த, ஹொரன பிரதேசங்களில் இராணுவ கௌவச வாகனத்தின் உதவியுடன் மீட்பு பணிகள் மீட்கப்பட்டன.

குருணாகல் மாவட்டத்திலுள்ள நிக்கவரட்டிய, ரஷ்னாயகபுர மற்றும் பொல்ஹகவெல பிரதேசங்களில் அனர்த்த பணிகளில் 14 ஆவது படைப் பிரிவிற்கு கிழ் இயங்கும் 143 ஆவது படைத் தலைமையகத்தினால் இந்த அனர்த்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன் இராணுவத்தினரால் உணவு பொதிகளும் விநியோகிக்கப்பட்டன. இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினால் உடுனுஓயா டாங்கி, நிக்கரவெட்டிய பிரதேசத்தில் அனர்த்த பணிகளில் ஈடுபட்டனர்.

இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் இராணுவ நடவடிக்கை பணியகத்திற்கு இந்த அனர்த்த பணிகளுக்கு நாட்டிலுள்ள அனைத்து இராணுவ முகாம்களினால் வேண்டிய ஒத்துழைப்பை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை நிமித்தம் பாதிப்படைந்துள்ள் பிரதேசங்களுக்கு 500 இராணுவத்தினரை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

Mysneakers | Nike SB