Header

Sri Lanka Army

Defender of the Nation

09th May 2018 21:44:41 Hours

ஐந்து இராணுவ ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் பங்களாதேஷ் ஊடாடும் அமர்வுகளுக்கு செல்கை

இலங்கை இராணுவம் மற்றும் பங்களாதேஷ் இராணுவ கொமிஷன் அற்ற உத்தியோகத்தர்களுக்கு இடையே பணிபுரியும் உறவுகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இராணுவ ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் பங்களாதேஷ் நாட்டிற்கு ஐந்து நாள் நீண்ட ஊடாடத்தக்க அமர்வுக்காக (5) ஆம் திகதி சனிக்கிழமை பயணச் சுற்றுலாவை மேற்கொண்டனர்.

இராணுவத்தின் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அனைத்து அம்சங்களிலும் அறிவு பரிமாற்றத்திற்கான ஒரு தளத்தை உருவாக்குவதற்கும், ஊக்குவிப்பதற்கும் இலக்காகக் கொண்டவர்.

கொமிஷன் அற்ற உத்தியோகத்தர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் திட்டத்தில் இராணுவ தளபதி ஆர்வம் காட்டி தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நட்பு நாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்கனவே வழங்கியுள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் சேனாநாயக்க, இலங்கை இராணுவ திறனை அடிப்படையாகக் கொண்டு மாற்றியமைக்கும் நோக்கத்துடன் கொமிஷன் அற்ற உத்தியோகத்தர்களுக்கு இந்த பங்களிப்புகான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தார்.

இந்த ஜந்து ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்களான ஐ.ஜே.ஏ சமிந்த (இலங்கை படைக்கலச் சிறப்பணி), ஈ.பி சிசிர குமார (இலங்கை சிங்க அணி), ஐ.டப்ள்யூ.எம் விஜயரத்ன (கொமாண்டோ படையணி), ஐ.எஸ்.ஜே.எம்.கே செனெவிரத்ன (மருத்துவ படையணி) மற்றும் ஐ.கே.டீ.எஸ் கருணாரத்ன (தேசிய பாதுகாப்பு படையணி) அவர்களை இராணுவ தளபதி ஆசிர்வாதித்து அவர்களது பயணத்திற்கு வாழ்த்துக்களும் தெரிவித்து சிறந்த அறிவுறுத்தல்களையும் வழங்கினார். இச்சந்தர்ப்பத்தில் இராணுவ தலைமையக பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர வன்னியாரச்சியும் இணைந்திருந்தார்.

இந்த உத்தியோகத்தர்கள், பங்களாஷே 46 சுயாதீன காலாட்படை பிரிகேட் தலைமையகத்தில் தங்கியிருப்பர். அத்துடன் பங்களாதேஷ் பொக்ரா எகடமிகளுக்கும் சுற்றுலாவையும் மேற்கொள்வார்கள்.

பங்களாதேஷத்திற்கு செல்லும் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்களுடன் இராணுவ தளபதி சந்தித்து உரையாடும்போது அவர்களது வேலைகளை பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு அதிகபட்சமாக அவற்றை பயன்படுத்துவதை வலியுறுத்தி, இலங்கைக்கு திரும்பிய பின்னர் அவர்களது கடமைகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

trace affiliate link | Air Jordan 5 Raging Bull Toro Bravo 2021 DD0587-600 Release Date - SBD