Header

Sri Lanka Army

Defender of the Nation

24th April 2018 13:10:48 Hours

வந்தாரமுல்லை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற சித்திரை வருட நிகழ்வு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சித்திரை வருட புத்தாண்டு நிகழ்வுகள் மட்டக்களப்பு வந்தாரமுல்லை பாடசாலை மைதானத்தில் (22) ஆம் திகதி இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகள் 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சூல அபேநாயக அவர்களது முழுமையான ஒத்துழைப்புடன் இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு முன்னரங்க கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் முதன்நாயக அவர்கள் வருகை தந்து மங்கள விளக்குகளை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இந்த புத்தாண்டு நிகழ்வில் யானைக்கு கண் வைத்தல், வலுக்குமரம் ஏறுதல், முட்டியுடைப்பு, தேங்காய் திருவுதல், சங்கீத கதிரை நடனம், விநோத உடை, மரதன், சைக்கிள் ஓட்டப் போட்டிகள் போன்ற பலவேறுபட்ட கேலி விளையாட்டுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

அப்பிரதேசத்தில் உள்ள தமிழ், முஸ்லீம் இராணுவத்தினருக்கு இடையில் சமாதானம் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த புத்தாண்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திரு. உதய குமார், 22 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர, 23 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் சூல அபேநாயக, மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் வயி.ஜே ஜகோதரஆரச்சி, ஏராவூர்பத்து செங்கல்லடி பிரதேச செயலாளர் திருமதி எம் முகைதீன், கிழக்கு பாதுகாப்பு தலைமை அதிகாரிகளான பிரிகேடியர் சாந்த ஹேவாவித்தாரன, பிரிகேடியர் மைக்கல் வன்னியாரச்சி, அப்பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லீம் மக்கள் இணைந்திருந்தனர்.

latest Nike Sneakers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092