Header

Sri Lanka Army

Defender of the Nation

29th March 2018 16:39:49 Hours

இராணுவ பதவி நிலை பிரதானி பதவியேற்பு

இராணுவத்தின் 52 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்கள் (29) ஆம் திகதி காலை அவரது பணிமனையில் உத்தியோக பூர்வமாக பதவியேற்றார்.

இவர் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மற்றும் பிரதி பதவி நிலை பிரதானி பதவியிலிருந்து இராணுவ பதவி நிலைக்கு தரம் உயரத்தப்பட்டார்.

மேஜர் ஜெனரல் அமல் கருணாநேசர அவர்கள் ஓய்வு பெற்றதையிட்டு இவர் இந்த பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

பதவி நிலை பிரதானி தனது கடமையை பொறுப்பேற்பதற்கு முன்பு தனது பணிமனையில் விளக்குகள் ஏற்றி இறை ஆசிர்வாத வழிபாடுகள்களின் பின்பு உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார். அச் சமயத்தில் இராணுவ பிரதான பதவி நிலை அதிகாரிகள், பணிப்பாளர்கள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவர் 1983 ஆம் ஆண்டு 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நித்திய படையணியில் கெடெற் அதிகாரியாக 18 ஆவது பயிற்சி நெறியை நிறைவு செய்து 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் திகதி லெப்டினன்ட் தரத்திற்கு உயர்வு செய்து கெமுனு படையணியில் இணைந்தார்.

தற்பொழுது 34 வருடங்கள் சேவையை பூர்த்தி செய்து பதவிநிலை அதிகாரி 11, 521 படைத் தலைமையகத்தின் பிரிகேட் மேஜர், இராணுவ உளவியல் நடவடிக்கை பணிப்பாளர், இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளர், பாதுகாப்பு பதவி நிலை அலுவலகத்தின் பணிப்பாளர் ஜெனரலாகவும், கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஆலோசனை அதிகாரியாவும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கட்டளை அதிகாரியாகவும் , மாதுறுஒயா இராணுவ பயிற்சி பாடசாலையில் கட்டளை தளபதியாகவும் மற்றும் பிரதி பதவி நிலை பிரதானியாகவும் இராணுவத்தில் பதவி வகித்துள்ளார்.

மேலும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியாகவும் 23, 65 ,54 533மற்றும் 512 ஆவது படைப் பிரிவு மற்றும் படைத் தலைமையகங்களில் கட்டளை தளபதியாகவும் 8 மற்றும் 5 ஆவது கெமுனு ஹேவா படையணியில் கட்டளை அதிகாரியாவும் கடமை வகித்துள்ளார்.

இவர் சிறந்த விளையாட்டு வீரராவார். இவர் கந்தான த மெசனட் கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்துள்ளார்.

Nike sneakers | NIKE AIR HUARACHE