Header

Sri Lanka Army

Defender of the Nation

25th March 2018 16:28:01 Hours

கெமுனு ஹேவா படையணியின் 30 ஆவது ஆண்டு நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் கௌரவமான படையணியான கெமுனு ஹேவா படையணியின் 30ஆவது ஆண்டு நிகழ்வை கொண்டாடும் நிகழ்வு (19)ஆம் திகதி திங்கட் கிழமை ரத்னபுர குருவிட்டயில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெணாந்து அவர்களின் பங்கேற்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்றது.

மேலும் ,இராணுவ சம்பிரதாய வழக்கத்திற்கமைய சப்ரகமுவ மகா சமன் தேவலாய, இந்து கோவில், ஜும்மா மசூதி மற்றும் கத்தோலிக்க தேவாலயங்கள் ஆகியவற்றில் அனைத்து மதச் சடங்குகள் மார்ச் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடத்தப்பட்தோடு கெமுனு ஹேவா படையணியின் அனைத்து தரப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஏதன்டவல விகாரையில் 12 பௌத்த மத குருமார்களின் ஆசிர்வாத பூஜை மற்றும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தலைமையகத்தில் உள்ள பௌத்த விகாரையில் விஷேட பூஜை வழிப்பாடுகளும் இடம் பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதான அதிதியாக வருகை தந்த கெமுனு ஹேவா படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெணாந்து அவர்களுக்கு கெமுனு ஹேவா படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் தம்பத் பெணாந்து உட்பட சிரேஷ்ட அதிகாரிகளினால் கெமுனு ஹேவா படையணியின் இராணுவ வீரரை மிக அருமையான வாழ்த்துகளுடன் வரவேற்றனர்.

இந் நிகழ்வில் கெமுனு ஹேவா படையணியின் கட்டளை தளபதி உட்பட அனைத்து படையினரும் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டதோடு விளையாட்டுத் துறையின் பல்வேறு துறைகளிலும் நன்றாக விளையாடிய கெமுனு ஹேவா படையணியின விளையாட்டு வீரர்களின் பாராட்டு விழாவும் இந் நிகழ்வில விழாவில் நடைபெற்றது.

Sport media | Men Nike Footwear