Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd March 2018 14:05:52 Hours

புனித சூசையப்பர் கல்லூரிக்கு இராணுவத்தினரால் உதவி

புனித சூசையப்பர் கல்லூரியின் 143 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23, 231 ஆவது படைப் பிரிவின் ஒத்துழைப்புடன் 10 ஆவது கஜபா படையணியினால் பாடசாலை வளாகம் சுத்தம் செய்து கட்டிடங்களுக்கு நிறந்தீட்டப்பட்டது.

231 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் நிவுன்ஹல அவர்களது மேற்பார்வையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப் பாடசாலையின் 143 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவிற்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல பிரதம விருந்தினராக வருகை தந்தார். இவர்களுடன் அருட் தந்தை டொக்டர் பியர்ரி என்ஜிவான் டாப், அருட் தந்தை ஜோசப் பொன்னையா அவர்கள் வருகை தந்தனர்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பனன்வல 143 வது கல்லூரி தின ஆண்டு பூர்த்தி விழா கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று பாடசாலை மாணவர்கள் மத்தியில் உறையை நிகழ்த்தினார்.

கல்லூரி புதுப்பிக்கும் பணிகளில் இராணுவத்தினரது பங்களிப்பையிட்டு பாடசாலை நிர்வாகத்தினால் இராணுவத்தினருக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு ஆயர் ஜோசப் பொன்னையா , பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய எஸ் வியாலேந்திரன், 23 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் சூல அபேநாயக, 231 ஆவது கட்டளை தளபதி பிரிகேடியர் செனரத் நிவுன்ஹெல, அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

buy footwear | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival