Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd March 2018 14:47:23 Hours

புத்தூர் மத்திய பஞ்ஞாசிஹ வித்தியாலயத்தின் தேவைகள் பூர்த்தி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் விடுத்த வேண்டுகோளுக்கமைய கொழும்பு, தர்ம விஜய மன்றத்தின் அனுசரனையில் புத்தூர் மத்திய பஞ்ஞாசிஹ வித்தியாலயத்தில் நீண்ட நாட்களாக தேவைப்பட்டிருந்த பாடசாலைக்குரிய சங்கீத உபகரணங்கள், மின் விசிரி, துவிச்சக்கர வண்டிகள் மற்றும் ஒலிபெருக்கி உபகரணங்கள் (20) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்த பாடசாலைக்கு நீண்ட நாட்களாக ஏற்பட்ட தேவையின் நிமித்தம் பாடசாலை நிர்வாக சபையினால் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த உதவி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 52 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்களது தலைமையில் 1 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன.

இந்ந நிகழ்விற்கு அனுசரனையாளர்களான கொழும்பு தர்ம விஜய மன்றத்தின் அங்கத்தவர்கள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

bridge media | jordan Release Dates