Header

Sri Lanka Army

Defender of the Nation

08th March 2018 15:10:54 Hours

‘குண ஜய சதுட பதனம்’ மன்றத்தினால் கிளிநொச்சி மாணவர்களுக்கு நன்கொடைகள்

கிளிநொச்சியில் குறைந்த வருமானத்தை பெறும் பாடசாலை மாணவர்களுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ‘குண ஜய சதுட பதனம்’ மன்றத்தின் அனுசரனையுடன் கிளிநொச்சி ‘நெலும் பியச’ கேட்போர் கூடத்தில் இந்த அன்பளிப்புகள் (6) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் வருகை தந்தார். அத்துடன் ‘குண ஜய சதுட பதனம், மன்றத்தின் தலைவர் திரு. குசில் குணசேகர, நடிகை , வழக்கறிஞ்சர் கிஷானி அலங்கி மற்றும் கிராம ஊனமுற்றோர் முகாமைத்துவ முகாமையாளர் திருமதி. நித்தியானஞ்சலி பெரேரா அவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டு இந்த அன்பளிப்பினை வழங்கினார்கள்.

57 மற்றும் 65 ஆவது படைப் பிரிவு படைத் தளபதி, கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் கிளிநொச்சி பாடசாலை மாணவர்கள் 291 பேருக்கு 1000/= பெறுமதிமிக்க பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

மேலும் பொது சாதாரணதர பரீட்சையில் சித்தி பெற்ற பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு துவிச்சக்கர வண்டியை பெறுவதற்கான கா சோலைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், பாடசாலை மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

url clone | Nike