Header

Sri Lanka Army

Defender of the Nation

05th March 2018 15:10:30 Hours

கல்வி பொது உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேர்களை பெற்ற யாழ் குடாநாட்டின் மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் நிகழ்வு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக, 306 பீ 2 லயன்ஸ் கழகம் மாகொல சபை ஒத்துழைப்புடன் யாழ் குடா நாட்டில் உயர்தர பரிட்சையை முடித்த மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களது கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்துடன் நிதியுதவி வழங்கும் நிகழ்வு (02) ஆம் திகதி வெள்ளிக் கிழமை யாழ் பாதுகாப்பு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மாகொல்ல சபை மற்றும் 306 பீ2 லயன்ஸ் கழகத்தினரது ஒத்துழைப்புடன் 2017ஆம் ஆண்டு உயர் கல்வியில் மதிப்பெண்களை பெற்ற மூன்று மாணவர்களுக்கு இந்த நிதியுதவி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இம்முறை யாழ் குடாநாட்டில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உடல், அறிவியல், இயற்பியல் பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பெற்று நாட்டில் முதலாவது இடத்தை யாழ் ஹார்ட்லி வித்தியாலய மாணவர் பெற்றுள்ளார். அதனை போன்று . உடல், அறிவியல், இயற்பியல் பிரிவில் மூன்றாவது இடத்தை யாழ் புனித பெட்ரிக் வித்தியாலயத்தின் ரமோன்ட் டெசிஸ் ஜெயராஜன் போல் ஜான்சன் பெற்றுள்ளார். மேலும் தொழில் நுட்ப பிரிவில் மூன்றாவது இடத்தை பெற்ற யாழ் வேம்படி மகளீர் வித்தியாலயத்தின் கமலேஸ்வரி செந்தில் நாதன் மாணவி பெற்றுள்ளார். இந்த மூன்று மாணவர்களது உயர் கல்வியை மேற்கொள்வதற்காக மாதத்திற்கு 5000 ரூபாய் வீதம் இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி கலந்து கொண்டார். 306 பீ லயன்ஸ் கழகத்தின் பிரதி தலைவி சாந்தனி நாணாயக்கார உட்பட லயன்ஸ் கழகத்தின் அங்கத்தவர்கள் பாடசாலை அதிபர்கள் இணைந்து கொண்டனர்.

bridge media | Nike Shoes