Header

Sri Lanka Army

Defender of the Nation

05th March 2018 15:15:54 Hours

81 ஆவது 2 மைல் தேசிய நீச்சல் போட்டிகளில் இலங்கை இராணு வீராங்களை வெற்றியை சுவீகரிப்பு

இலங்கை தண்ணீர் விளையாட்டு சங்கத்தினால் 81 ஆவது தடவை ஒழுங்கு செய்யப்பட்ட வருடாந்த தேசிய 2மைல் திறந்த கடல் நீச்சல் போட்டிகள் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் 12 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்கள் 750 நீச்சல் போட்டியாளர்கள் இந்த போட்டிகளில் இணைந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவ படுத்தி 123 நீச்சல் போட்டியாளர்களும், 7 நீச்சல் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

கல்கிஸ்ஸ சவால் போட்டியில் கலந்து கொண்டு மூன்றபவது தடவையும் இலங்கை இராணுவம் வெற்றியை தழுவிக் கொண்டது.

இப்போட்டிகளில் அவயங்களை இழந்த இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சாதாரண போர் வீரன் டி.ஜி அஜித் மார அவர்களும் வெற்றியை சுவீகரித்து கொண்டனர்.

கேர்ணல் க்லிபர்ட் டி சொயிஷா மற்றும் லெப்டினன்ட் கேர்ணல் டெரில் டி சில்வா இராணுவ தண்ணீர் விளையாட்டு சங்கத்தை பிரதிநிதித்துவ படுத்தி 40 வயதிற்கு மேற்பட்டவர்களின் போட்டியில் பங்கேற்றுக் கொண்டனர்.

இலங்கை தண்ணீர் விளையாட்டு சங்கத்தின் நீச்சல், போடர் போலோ மற்றும் திறந்த தண்ணீர் நீச்சல் போட்டிகள் இடம்பெற்றன.

ஆசியா வலயத்தில் இடம்பெறும் பழமை வாய்ந்த இந்த போட்டிகள் 1938 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஞாயிற்றுக் கிழமை காலை வெள்ளவத்தை போஸ்வேல் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டு கல்கிஸ்ஸ ஹோட்டலில் முடிவடைந்தது.

இராணுவ நீச்சல் சங்கத்தின் தலைவர் தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவ நீச்சல் வீர வீராங்கனைகள் பங்கேற்றுக் கொண்டனர்.

latest Nike Sneakers | Men’s shoes