Header

Sri Lanka Army

Defender of the Nation

01st March 2018 10:05:58 Hours

11ஆவது படைப்பிரிவின் 8ஆவது ஆண்டு நிறைவு

கண்டியில் உள்ள மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11ஆவது படைப் பிரிவின் 8ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு படையினரால் கடந்த (15)ஆம் திகதி புதன் கிழமை பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

அந்த வகையில் ஆண்டு நிறைவை கொண்டாடும்நிமித்தம் பெப்ரவரி 14ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை பல நிகழ்வுகள்இடம் பெற்றன.

இந்த நிகழ்வானது 11ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களின் ஆலோசனைக்கு அமைய இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து பெப்ரவரி (14)ஆம் திகதி காலை ஸ்ரீ தலதா மாளிகையில் பௌத்த சமய வழிபாடுகளின் போது கிளான்பச(பானம்) வழிப்பாடுகளின் போது வழங்கப்பட்டது. தொடர்ந்து (15)ஆம் திகதி வியாழக்கிழமை புத்த பெறுமானின் புணித தந்த வழிபாட்டுக்கு பால் உணுவுகளும் படையினரால் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இராணுவ கலாச்சாரத்துக்கு அமைய11ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களுக்கு 5ஆவது இலங்கை இராணுவ காலாட் படையினரால் வரவேற்பு மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.அதன்படி அனைத்து படையினரும் மதிய உணவு விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டான.

திங்கட்கிழமை (19)ஆம் திகதி இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பௌத்த மத பிரித் பூஜையை தொடர்ந்து அடுத்த நாள் (20) ஆம் திகதி அனைத்து பௌத்த துறவிகள் (63)பேர்களுக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்துசெவ்வாய்க்கிழமை (20) ஆம் திகதி 11ஆவது படையினரால் கண்டி லெவெல்ல தர்மஷோகா கல்லூரியில் 47 பாடசாலை மாணவர்களுக்கு ஒரு சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டது. மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் தீபால்சுபசிங்க (Rtd) அவர்களினால் பாடசாலை மாணவர்களுக்கு ஒரே வகையான பள்ளி சீருடைகள் மற்றும் காலணிகள் வளங்கப்பட்டன.

Running sports | Nike Air Zoom Pegasus 38 Colorways + Release Dates , Fitforhealth