Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd February 2018 10:02:01 Hours

இலங்கை இராணுவ தொண்டர்ப படையணியின் விளையாட்டுகள் முடிவு

2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த படைத் தலைமையங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பலவாறான வெற்றிகளை இலங்கை இராணுவ தொண்டர்ப் படையினர் பெற்றுக் கொண்டதுடன் இந் நிகழ்வுகள் தியத்தலாமை மகிந்த ராஜபக்ஸ கேட்போர் கூடத்தில் இடம் பெற்று (22) திகதி முடிவுக்கு வந்தடைந்துள்ளது.

இந் நிகழ்வில் இராணுவ தொண்டர்ப படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கலந்து கொண்டார்.

இதன் போது விளையாட்டு வீரர்களின் பலவாறான திறமைகள் போன்றன இராணுவத் தளபதியவர்களால் பார்வையிடப்பட்டது.

இவ்வாறு இடம் பெற்ற மூன்று நாள் விளையாட்டுப் போட்டிகளில் இராணுவ தொண்டர்ப படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்கள் இராணுவத் தளபதியவர்களை வரவேற்றதுடன் இப் போட்டி நிகழ்வூகளில் தமது பங்களிப்பை பாரிய அளவில் வழங்கியிருந்தார்.

இப் போட்டிகளில் அனைத்து படைத் தலைமையகங்களையும் உள்ளடக்கி 750 படை வீர வீராங்கனைகள் போன்றௌர் ஒன்றினைந்து தமது திறமைகளை திறம்பட காண்பித்திருந்தனர்.

அந்த வகையில் நாற்பத்து எட்டு வகையான விளையாட்டுக்கள் காணப்பட்டதுடன் மரதன் ஓட்டப் போட்டிகள் மற்றும் அஞ்சல் ஓட்டப் போட்டிகள் ஓடுபாதைககளில் இடம் பெற்றதுடன் இப் போட்டிகளில் உயரம் பாய்தல் நீளம் பாய்தல் குண்டெறிதல் பருதி வட்டம் எறிதல் போன்ற விளையாட்டுக்களும் உள்ளடக்கப்பட்டு காணப்பட்டன.

இந் நிகழ்வூகளில் இறுதிப் போட்டியானது பெண்களுக்கான 400மீற்றர் ஆண்களுக்கான 1500மீற்றர் பெண்களுக்கான 100மீற்றர் ஆண்களுக்கான 100மீற்றர் ஆண் பெண் இருபாலாருக்குமிடையிலான கயிறிழுத்தல் போட்டிகள் 4×100 மீற்றர் போட்டிகள் போன்றன காணப்பட்டன. அத்துடன் பலவாறான கலாச்சார நிகழ்வூகளும் இடம் பெற்றன.

அந்த வகையில் பனாகொடை இராணுவத் தலைமையகத்தின் உடற் பயிற்ச்சி பயிற்றுவிப்பாளர்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.

மேலும் இந் நிகழ்வை பேண்ட் வாத்தியக் குழுவினர் மற்றும் பல அணிவகுப்பு முறைகள் போன்றன வர்ணமயப் படுத்தின.

ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல் படையணியினர் 284புள்ளிகளைப் பெற்று வெற்றியீட்டியூள்ளனர். இலங்கை இராணுவ இலேசாயூத காலாட் படையினர் 211 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

அந்த வகையில் இவ் 2018ஆம் ஆண்டின் இரு பாலாரிற்குமான விளையாட்ப் போட்டிகளில் இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல் படையணியின் சாதாரண சிப்பாய் எல் ஜி தனன்ஜித் மற்றும் 5ஆவது மகளிர் படையணியின் எம் எம் ரத்னகுமாரி போன்றௌர் வெற்றிபெற்றனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களால் வெற்றியீட்டியர் வீர வீராங்கனைகளுக்கான வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வுகள் இராணுவ விதிமுறைகளுக்கமைவாக இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களால் முடிவிற்கு வந்தது.

Buy Sneakers | Nike Shoes