Header

Sri Lanka Army

Defender of the Nation

14th February 2018 10:31:16 Hours

சக்கர நாற்காலி டெனிஸ் ஆண்கள் ஒற்றையர் சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவத்திற்கு வெற்றி

இலங்கை டென்னிஸ் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீர்கொழும்பு திறந்த சர்வதேச சக்கர நாற்காலி போட்டியில் பங்கு பற்றிய இராணுவத்தைச் சேர்ந்த லான்ஸ் பொம்படியர் டீ.ஏ.எஸ்.ஆர் தர்மசேன சம்பியன்ஸ்ஷிப்பை சுவீகரித்துக் கொண்டார்.

சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் (ITF) ஒருங்கிணைப்புடன் கொரியா ஓபன் சேங் – கோ ஓ டெனிஸ் அணி மற்றும் இலங்கை டெனிஸ் அணிகளுக்கு இடையிலான இறுதி சுற்றுப்போட்டிகள் (12) ஆம் திகதி திங்கட் கிழமை நீர்கொழும்பில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் பங்கு பற்றிய இலங்கை இராணுவ வீரர் திறமையாக விளையாடி வெற்றியை சுவீகரித்துக் கொண்டார்.

திறந்த சக்கர நாற்காலி சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நீர்கொழும்பில் பெப்ரவாரி மாதம் 9ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இப் போட்டியில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இந்தியா, தாய்லாந்து, மலேசியா, கொரியா, இஸ்ரேல் மற்றும் இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த சக்கர நாற்காலி விளையாட்டு வீரர்கள் பங்கேற்று கொண்டனர்.

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லான்ஸ் பொம்படியர் டீ.ஏ.எஸ்.ஆர் தர்மசேன உலகின் முதல் 100 வீல்சேர் டென்னிஸ் வீரர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.அனுபவமிக்க உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களை வீழ்த்தி இந்த நிலைக்கு இந்த இராணுவ வீரர் உயர்ந்துள்ளார்.

சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் (ITF) கருத்துப்படி சக்கர நாற்காலி டென்னிஸ் தரவரிசைகளான இராணுவ வீரர் 95 வது இடத்தில் உள்ளார், மேலும் இந்த வெற்றியின் மூலம் இவர் உலக தரவரிசையில் சிறப்பான வீரராக திகழ்வார்.

இந்த இராணுவ வீரர் உலகக் கிண்ணஒற்றையர் சாம்பியன்ஷிப் போட்டியின் மூலம் 91 வது இடத்தையும் உலகக்கிண்ண இரட்டையர் போட்டியில் 47 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

மேலும் இந்த போட்டிகள் பெப்ரவரி 14-17 ஆம் திகதிகளிலும், 18 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரையும் மற்றும் 22 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை இலங்கையிலுள்ள எஸ்எஸ்சி திறந்த விளையாட்டரங்கில் இடம்பெறும்.

சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியானது இலங்கையின் பாரா ஒலிம்பிக் பதக்கத்தின் நம்பிக்கையாக விளங்கியுள்ளது. மேலும், சர்வதேச போட்டிகளான ஹோல்டிங்ஸ் சர்வதேச நட்சத்திரங்கள் என இலங்கை வீரர்களை வளர்ப்பதற்கு மிகவும் உருதுணையாக அமைந்துள்ளது.

buy footwear | Releases Nike Shoes