Header

Sri Lanka Army

Defenders of the Nation

13th February 2018 13:17:45 Hours

வவுனியாபாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் இன்னிசை கருவிகள் விநியோகம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 21 மற்றும் 211 படைப்பிரிவு தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் வவுனியா மஹாமயிலங்குளம் ஆரம்ப பாடசாலைக்கு இன்னிசை கருவிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இந்த பாடசாலை மாணவர்களுக்கு டிராம்ஸ், மெலோடிகா, ட்ரேங்கல், சிம்பல்ஸ் போன்ற பல இசைக் கருவிகளை 211 படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் தாரக ரத்னசேகர அவர்களினால் வழங்கப்பட்டன.

இந்த இசைக்கருவி உபகரணங்கள் 211 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரிக்கு அவரது நண்பர்கள் நன்கொடைகளை வழங்கியிருந்தனர்.

வவுனியாவில் உள்ள தேவைக்குட்பட்ட குடும்பங்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சிகளுக்கு பொதுமக்கள்இராணுவத்திற்கு பாராட்டை வழங்கினார்கள்.

இந்த நிகழ்விற்கு 211 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் தாரக ரத்னசேகர இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் இணைந்திருந்தனர்.