Header

Sri Lanka Army

Defender of the Nation

06th February 2018 19:11:40 Hours

யாழ் பாதுகாப்பு படையினரால் பொது மக்களின் போக்கு வரத்திற்காக காங்கேசன்துறை வீதி திறந்து வைப்பு

நல்லிணக்கத்தையூம் ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்பும் நோக்கில் வடக்கின் யாழ் பாதுகாப்பு படையினரால் பொது மக்களின் போக்கு வரத்திற்காக 28வருடங்களின் பின்னர் பொன்னாலை பருத்தித் துரை AB - 21 வீதியானது நேற்றய தினம் காலை (6) திறந்து விடப்பட்டது.

அந்த வகையில் இவ் வீதியானது யாழ் பாலாலியினுhடாக தொண்டமானாறு மற்றும் வேறு சில கிராமப் புரங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. இதன் மூலம் பொது மக்கள் தமது இல்லங்களுக்கும் பிரதேசங்களிற்கும் இலகுவில் பயணிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னய காலங்களில் கிட்டத் தட்ட 30 கிமீ துhரத்தில் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை காணப்பட்டதுடன் இவ் வீதியை பொது மக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டதன் மூலம் 45 நிமிடங்களில் தமது பிரதேசங்களிற்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது. இந் நிகழ்வில் யாழ் மாவட்ட செயலாளரான நாகலிங்கம் வேதநாயகம் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி போன்றௌரால் இவ் வீதிகள் திறக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக விடப்பட்டது.

வரலாற்றின் முக்கியமான இத் தருணத்தில் இலங்கை போக்குவரத்து சங்கத்தின் உதவியூடனான பஸ் சேவை அனைத்து மதத் தலைவர்களினதும் ஆசீர்வாதத்துடன் காங்கேசன் துறை நோக்கி பயணித்ததுடன் இதில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியவர்களும் பொது மக்களின் பயணத்தில் கலந்து கொண்டார். அந்த வகையில் 2015ஆவது ஆண்டு காலப் பகுதியின் பின்னர் அரச சட்டத்திற்கமைவாக இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் பொது மக்களின் காணிகளை விடுவிக்கும் பணிகள் யாழ் பாதுகாப்பு தளபதியவர்களின் பங்களிப்போடு இடம் பெறுகின்றது.

இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) எஸ் முரலிதரன் 51ஆவது பாதுகாப்பு படை கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்தின தெல்லிப்லை பிரதேச செலயலாளர் எஸ் சிவா ஸ்ரீ அரச அதிகாரிகள் பொது மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

latest Running Sneakers | New Releases Nike