Header

Sri Lanka Army

Defender of the Nation

17th January 2018 21:32:27 Hours

பாகிஸ்தான் இராணுவ தளபதி மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களை சந்திப்பு

இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் இராணுவ தளபதியான (COAS) ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா அவர்கள் நல்லிணக்கம் புரிந்துணர்வு மற்றும் இராணுவ ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதுடன் புதன் கிழமை (17) காலை வேளை முப்படைத் தளபதியான மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதிச் செயலகத்தில் வைத்து சந்தித்தார்.

இவ்வாறு வருகை தந்த பாகிஸ்தான் இராணுவ தளபதியான கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வரவேற்றதுடன் இவ்விரு நாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் பாகிஸ்தான் ஆனது அவரசகால தேவைகளில் போது இலங்கையில் சேவையை வழங்க காத்திருப்பதனைக் குறித்து நன்றிகளைத் தெரிவித்ததுடன் ஆசியாவின் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான நட்பை மேம்படுத்தல் தொடர்பான கருத்தையும் மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

இந் நிகழ்வின் இறுதியில் பாகிஸ்தான் இராணுவ தளபதியவர்களால் நல்லிணக்கம் மற்றம் ஒருமைப்பாட்மை மேம்படுத்தும் நோக்கில் மதிப்பிற்குறி ஜனாதிபதியவர்களுக்கான விசேட நினைவுச் சின்னங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதோடு இலங்கைக்கான பாகிஸ்தான் துhதரகத்தின் உயர் ஸ்தாணிகரான வைத்தியர் ஷாஹிட் அகமட் ஹஸ்மத் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் மற்றும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கேர்ணல் சஹ்ஜாத் அலி போன்றோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Buy Sneakers | Men's Sneakers