Header

Sri Lanka Army

Defender of the Nation

21st December 2017 13:16:52 Hours

ஐக்கிய நாடுகளின் மாலி நாட்டின் சமாதான நடவடிக்கைகளுக்காக செல்லவுள்ள இராணுவத்தினரை பார்வையிடச் சென்ற இராணுவத் தளபதி

லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள மாலி நாட்டிற்கு அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்காக விஜயம் செய்யவூள்ள இலங்கை இராணுவ போர் கருவிப் பாதுகாப்பு குழுவினருடனாக கலந்துரையாடலை பனாகொடையிலுள்ள இலங்கை இராணுவ காலாட் படைத் தலைமையகத்திற்கு இன்று காலை (20) விஜயத்தை மேற்கொண்டார்.

இவ்வாறு வருகை தந்த இராணுவத் தளபதியவர்களை இலங்கை இராணுவ காலாட் படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்கள் மற்றும் பாதுகாப்பு சேவைகளின் கட்டளை கல்லுhரியின் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க போன்றௌர் வரவேற்றனர்.

இதன் போது உரையாற்றிய இராணுவத் தளபதியர்வகள் நான் பிறந்தது முதல் 1960ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் இவ்வாறான வெளிநாட்டு சேவைகளைப் பூர்த்தி செய்துள்ளதுடன் 17000 இராணுவ வீரர்கள் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்காக விஜயம் செய்துள்ளதுடன் 300 இராணுவ கண்காணிப்பு அதிகாரிகளாக இன்றுவரை ஐக்கிய நாடுகளில் சமாதானத்தை நிலைநாட்டும் நோக்கில் சேவையாற்றுவதுடன் எதிர்காலத்தில் மாலி நாட்டைப் போன்று வெவ்வேறு நாடுகளிலும் சேவையாற்றுவதற்கான தேவைகள் காணப்படுவதாகத் தெரிவித்தார். இலங்கை இராணுவமானது மிகவூம் கௌரவமான முறையில் மிக வேகமாக ஒழுக்கத்துடன் தமது கடமைகளை நிகராக பூர்த்தி செய்கின்றது என இவர் மேலும் குறிப்பிட்டார்.

மாலி நாட்டிற்கு அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்காக விஜயம் செய்யவூள்ள இலங்கை இராணுவப் படையினர் சர்வதேச ரீதியிலான பொறுப்புக்களை நிகராக் கையான்டு அகில ரீதியில் அவற்றை எடுத்துக்காட்டல் வேண்டும் என விரும்புவதாகவூம் அவர் குறிப்பிட்டார். அத்துடன் மாலி நாட்டிற்கான இடம் பெறுகின்ற சேவைகள் தனிநபர் பட்டது அல்ல எனவூம் இலங்கை தேசத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யூம் நோக்கில் இடம் பெறுவதாகவும் இவ்வாறான சமாதான நடவடிக்ககைப் பணிகள் சர்வதேச ரீதியில் நிகராக இட்டுச் செல்ல இராணுவம் உரிய விதத்தில் செயல்படுவதாகவூம் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில் இராணுவப் படையினர்களாகிய நாம் ரட ரகின ஜாதிய (RRJ) எனும் திட்டத்தின் மூலம் சமூதாயத்தில் விசேட பிரஜயாகத் திகழ்வர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதியவர்களுக்கு மாலி நாட்டின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்காக செல்லவூள்ள இலங்கை இராணுவ போர் கருவிப் பாதுகாப்பு படைக் குழுவின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் கலன அமுனுபுர அவர்களால் ஞாபகார்த்த சின்னமும் வழங்கப்பட்டதுடன் இராணுவத் தளபதியவர்களால் பிரதம அதிதிகள் புத்தகத்தில் கையொப்பமும் இடப்பட்டது.

short url link | Mens Flynit Trainers