Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd November 2017 11:41:47 Hours

கிளிநொச்சிப் பிரதேசத்தில் நடப்பட்ட 2500 தென்னங் கன்றுகள்

கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப் பிரிவினரால் கிட்டத் தட்ட 2500 தென்னங் கன்றுகளை கிளிநொச்சி மாவட்டத்தில் நடும் திட்டமானது கடந்த புதன் கிழமை (1) இராணுவத்தினரின் பங்களிப்போடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்த வகையில் மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 2017ஆம் ஆண்டிற்கான தேசிய உணவுத் தயாரிப்பு எனும் திட்டத்தின் கீழ் இம் மரநடுகை திட்டம் அமைகின்றது.

இத் திட்டமானது கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவண அவர்களின் வழிகாட்டலுடன் 57ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் கண்காணிப்பின் கீழ் இலங்கை இராணுவத்தின் 17ஆவது கஜபா படையிரால் இம் மரநடுகைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 57ஆவது படைத் தலைமையகத்தின் கட்;டளை அதிகாரியவர்கள் கலந்து கொணட்டார்.

அத்துடன் இவ் 2500 தென்னங் கன்றுகளில் சில கிளிநொச்சிப் பிரதேசத்தின் கீழ் இயங்கும் வேறு படைத் தலைமையகங்களிற்கும் வழங்கப்பட்டது.

இத் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் விளக்கிக் கோரினார்.

இந் நிகழ்வில் முல்லை தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட தென்னை வள அபிவிருத்தி அதிகாரிகளான திரு கசுன் ரத்நாயக்க ,திரு தனுஜன் போன்றௌர் கலந்து கொண்டனர்.

அன்மையில் இவ்வாறானதோர் திட்டம் கெக்கிராவை திம்பட்டுவான் பிரதேசத்தில் மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களின் தலைமையில் இடம் பெற்றமை குறிப்பிடத் தக்க விடயமாகும்.

Sportswear free shipping | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp